புதுச்சேரி

மகளிர் குழுவினருக்கு தேங்காய் மதிப்புக்கூட்டு தொழில் பயிற்சி

காரைக்காலை அடுத்த மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், தேங்காயில் மதிப்புக்கூட்டுதல் நுட்பங்கள் குறித்த தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், தேங்காயில் மதிப்புக்கூட்டுதல் நுட்பங்கள் குறித்த தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில், மதிப்புகூட்டுப் பொருட்களான தேங்காய்சிப்ஸ், தேங்காய் மிட்டாய், தேங்காய் கம்மர்கட், தேங்காய் மைசூர்பாக், தேங்காய்பால் முறுக்கு, உடனடி தேங்காய் சட்னி கலவை மற்றும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரித்தல் குறித்து செயல்விளக்கத்துடன்பயிற்சி நடத்தப்பட்டது. அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை வண்டார்குழலி மற்றும் மனையியல் பட்டதாரி ஆனந்தி ஆகியோர் பயிற்சியினை வழங்கினர். வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் கதிரவன் பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார். திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூனைச் சேர்ந்த 20 சுயஉதவிகுழு உறுப்பினர்கள் இப்பபயிற்சியில் பங்கேற்றனர்.