புதுச்சேரி

நகராட்சி குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் இன்று மாலை ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு, காரைக்கால் பரவை பேட் பகுதியில் உள்ளது. இந்த குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் இன்று மாலை ஆய்வு செய்தார். மேலும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் எந்திரம் பொருத்துவதற்கான பணியையும் பார்வையிட்டார். அத்துடன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் குப்பை சேகரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து