நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெய்கலைசெல்வன்(வயது19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேரளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கலைசெல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.