காலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை, 24 மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை திரைக்கதையாக்கி இருக்கிறோம். படத்துக்கு, பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் சூட்டியிருக்கிறோம்... என்று கூறுகிறார், டைரக்டர் டி.ஆர்.விஜயன்.
இதில் புதுமுகங்கள் விஜய் விஷ்வா, மனோஜ் குமார் நடிக்கிறார்கள். முகமது ஜாபர் வசனம் எழுத, ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார். பி.செந்தில் நாதன் தயாரிக்கிறார். இது, நகைச்சுவை கலந்த காதல் படம்.