பாவூர்சத்திரம்:
நெல்லை - தென்காசி சாலை 4 வழிச்சாலையாக அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதை முன்னிட்டு சாலைகளை விரிவுபடுத்துதல், சாலை அருகில் இருந்த மரங்களை மறு நடவு செய்தல், மின் ஒயர்களை மாற்றுதல், வாறுகால் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட் உள்ள பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே கேட்டின் இருபுறங்களிலும் பெரிய அளவிலான சிமெண்டு தூண்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியது.