புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பட்டம்

காரைக்கால்

காரைக்காலை அடுத்த மேல வாஞ்சூர் கிராமத்தில் உள்ள தனியார் துறைமுகம் மூலம் நிலக்கரி, உரம், மணல் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் துறைமுக நிர்வாகத்தை அதானி குழுமம் தற்போது கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்வதால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதையடுத்து நிலக்கரி இறக்குமதிக்கு தடை கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று துறைமுகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துறைமுகத்தில் அளவுக்கு அதிகமான நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கவேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு துறைமுகத்தில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.