சினிமா துளிகள்

‘அரண்மனை 3’ பட அனுபவத்தை பகிர்ந்த இசையமைப்பாளர் சத்யா

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 3 திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினத்தந்தி

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அரண்மனை 3. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது: இது எனது 25-வது படம். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்த லாக்டவுன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை படத்தின் மற்ற பாகங்களைவிட இந்த படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்