மாவட்ட செய்திகள்

6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் மற்றும் போலீசார் காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர். அப்போது அவர்களில் ஒருவர் தப்பிச்சென்றார்.

பிடிபட்டவரிடம் விசாரித்த போது அவர் செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த மச்சக்காளை மகன் ராமநாதன் (வயது 31) என்பதும், தப்பிச் சென்றவர் அடைக்கன்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் என்பதும், அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ராமநாதனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 கிலோ எடையுள்ள 20 புகையிலை பாக்கெட்டுகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.