மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு இடையே தகராறு; 3 பேர் மீது வழக்கு

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காட்டு பிரிங்கியம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 39). இவரும், பெரியநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்களான சரத்குமார்(25), தென்னரசு(25) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் அவர்கள் நாகமங்கலம் தனியார் பள்ளி அருகே அமர்ந்து தங்களது குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அன்பரசன் மற்றும் சரத்குமார் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் அன்பரசன், சரத்குமார், தென்னரசு ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.