மாவட்ட செய்திகள்

காங்கிரசார் நூதன போராட்டம்

பட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி:-

பட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரவர் வீடுகள் முன்பு மோட்டார் சைக்கிள்கள், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரவர் வீடுகள் மற்றும் கடைகள் முன்பு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்தனர்.

நகர காங்கிரஸ்

தர்மபுரி நகர காங்கிரஸ் அலுவலகம் முன்பு நகர தலைவர் செந்தில்குமார் தலைமையில் எஸ்.சி.- எஸ்.டி. மாநில பொது செயலாளர் மாதேஸ்வரன், நகர செயலாளர் ஜெய்சங்கர், நிர்வாகிகள் ஜெயராமன், பெருமாள் ஆகியோர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அந்தந்த பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.