மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிதாக 365 பேருக்கு கொரோனா

மதுரையில் புதிதாக 365 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் நேற்று, புதிதாக 365 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இது வரை 89 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 583 பேர்குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம், இதுவரை 84 ஆயிரத்து 224 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். நேற்று மதுரையில் யாரும் உயிரிழக்கவில்லை. மதுரை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 67 ஆக உள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 800 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதம் உள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தை சேர்ந்த 47 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.