விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 49,027 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 46,547 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 159 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,924 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.