மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது.

நேற்று வரை 205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 54 ஆயிரத்து 44 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.