மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 17 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 224 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 278 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.