கோவை
கோவையில் கொரோனா தொற்று கடந்த மாதம் முதல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 79 ஆக உயர்ந்து உள்ளது.
இதுதவிர கோவை தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 88 வயது, 78 வயது முதியவர்கள், 63 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். கொரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் இதுவரை 2,135 பேர் இறந்து உள்ளனர்.
கோவையில் நேற்று 357 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனைதொடர்ந்து மாவட்டத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 167 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 2 ஆயிரத்து 777 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.