மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.