மும்பை

மராட்டியத்தில் புதிதாக 316 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் புதிதாக 316 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக 316 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் பாதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வந்தது. ஆனால் நேற்று கொரோனா பாதிப்பு 300-ஐ தாண்டி பதிவானது. இன்றும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 316 ஆக பதிவானது.

இது கடந்த மார்ச் 12-ந் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் பதிவான அதிகப்பட்ச கொரோனா பாதிப்பாகும். இன்று பாதிக்கப்பட்டவர்களையும் சேர்ந்து மராட்டியத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 81 ஆயிரத்து 858 ஆக உயர்ந்தது.

அதேநேரம் இறப்பு எண்ணிக்கை மாறாமல் 1 லட்சத்து 47 ஆயிரத்து 856 ஆக தொடர்கிறது. மராட்டியத்தில் 201 பேர் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 77 லட்சத்து 32 ஆயிரத்து 282 ஆக உயர்ந்து. தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,720 ஆக உயர்ந்தது.

தலைநகர் மும்பை

மாநிலத்தில்  நேய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இங்கு மட்டும் 223 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

மும்பையில் இதுவரை 10 லட்சத்து 62 ஆயிரத்து 40 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 566 ஆக உள்ளது.

மும்பையில் 124 பேர் கொரேனாவில் இருந்து குணமானதன் மூலம், நகரில் தெற்றில் இருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நகரில் 1,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்