கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 12,898 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 12,197 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 567 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 139 பேருக்கு தொற்று உறுதியானது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,037 ஆக உயர்ந்துள்ளது.