மாவட்ட செய்திகள்

209 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 53,484 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 364 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 50,072 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,048 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,693 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து 303 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 50,375 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 2,954 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.