நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 19 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 216 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே நேற்று 20-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 478 மையங்களில் நடைபெற்றது. இம்முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் நேற்று ஒரே நாளில் 8,584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.