மதுரை,
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது. மதுரை மாவட்டத்திலும் நேற்று 1,200 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் புறநகரில் 41 ஆயிரத்து 515 பேருக்கும், நகர் பகுதியில் 34 ஆயிரத்து 113 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 10 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.