மாவட்ட செய்திகள்

700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் 700 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 700 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடை பெற உள்ள தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.