நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 27-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள் என 352 நிலையான முகாம்களிலும், 21 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 373 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இதில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,400 ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 26 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.