மாவட்ட செய்திகள்

ராசிபுரத்தில் ரூ.12 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.12 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், ஏப்:

ராசிபுரத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

374 பருத்தி மூட்டைகள்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 374 பருத்தி மூட்டைகள் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 337 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி மூட்டைகள் 14 மூட்டைகளும், கொட்டு பருத்தி 23 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

கொட்டு பருத்தி

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.10,699-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13,019-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.10,700 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,909-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5,900 முதல் அதிகபட்சமாக ரூ.7,800-க்கும் ஏலம் போனது.