வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதாகவும், அவற்றால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் கமிஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் சென்றன.
அவரது உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இன்று வேலூர் பழைய பஸ்நிலையம், மண்டித்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகே, சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்தனர்.
மேலும் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.