பெங்களூரு

கிரிக்கெட் சூதாட்டம்; 2 பேர் கைது

பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, பைரசந்திரா அருகே முனிநாகப்பா லே-அவுட் 5-வது கிராஸ் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்திய போது பல லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்த்து.

இதையடுத்து 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 2 பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 வாலிபர்கள் மீதும் டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை