மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

பள்ளத்தால் விபத்து அபாயம்

தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வேந்திரன், தேனி.

சாக்கடை கால்வாய் வேண்டும்

திண்டுக்கல் அனுமந்தநகர் 7-வது தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாரத், அனுமந்தநகர்.

காட்சிப்பொருளான மேல்நிலை தொட்டி

திண்டுக்கல்லை அடுத்த பெரியபள்ளப்பட்டி 9-வது வார்டு பிஸ்மிநகரில் பல மாதங்களுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக பக்கத்து ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளான மேல்நிலை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்பாஸ் அலி, பிஸ்மிநகர்.

ஆக்கிரமிப்பின் பிடியில் சாலை

தேனி வடபுதுப்பட்டி கோவிந்தசாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் மழைக்காலத்தில் சாலையோரத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ்பாண்டியன், வடபுதுப்பட்டி.