தஞ்சாவூர்,
தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் ரெங்கன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ராஜாராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியம், மாவட்ட செயலாளர் அருளானந்தய்யா, தலைவர் ஜான்போஸ்கோ மற்றும் தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் ராஜாராஜேந்திரன் பேசுகையில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரு.380 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அறிவித்த தொகையை காலதாமதம் இல்லாமல் உடனே வழங்க வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பும் குடும்பத்தோடு உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளோம்என்றார்.