மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவில் ஓடும் கழிவுநீர்
அல்லிநகரம் அருகே சீப்பாலக்கோட்டையில் காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நடுத்தெருவில் கழிவுநீர் ஓடுகிறது. மேலும் சாலை வசதியும் இல்லாததால் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி தார்சாலை, சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-திருக்குமரன், அல்லிநகரம்.
தெருநாய்கள் தொல்லை
பழனி 21-வது வார்டு கோட்டைமேட்டு தெருவில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவில் தனியாக செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பகலில் சிறுவர்களை கூட தெருவில் விளையாட விடுவதற்கு பயமாக உள்ளது. தெருநாய்கள் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மன்சூர், பழனி.
வீணாகும் குடிநீர்
உத்தமபாளையம் போலீஸ் நிலையம் அருகே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பக்ருதீன், உத்தமபாளையம்.
சேதம் அடைந்த மின்கம்பம்
பெரியகுளம் அருகே ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சு உதிர்ந்து மின்கம்பம் வளைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-ராஜாமுகமது, பெரியகுளம்.