புதுச்சேரி

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

அரியாங்குப்பம் அருகே அங்கன்வாடி மையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

தினத்தந்தி

அரியாங்குப்பம்

மணவெளி தொகுதிக்குட்பட்ட அரியாங்குப்பம் அடுத்த டோல்கேட் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்புறத்தில் அரசு சார்பில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் நுழைவுவாயில் பகுதியில் சிமெண்டு சிலாப் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷ பூச்சிகளின் கூடாரமாக திகழ்கிறது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளும், பெற்றோரும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்