மும்பை

ரவுடி கோல்டி பிராரிடம் இருந்து முன்னாள் மந்திரி அஸ்லாம் சேக்கிற்கு கொலை மிரட்டல்

ரவுடி கோல்டி பிராரிடம் இருந்து முன்னாள் மந்திரி அஸ்லாம் சேக்கிற்கு கொலை மிரட்டல் வந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை, 

ரவுடி கோல்டி பிராரிடம் இருந்து முன்னாள் மந்திரி அஸ்லாம் சேக்கிற்கு கொலை மிரட்டல் வந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல்

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் ரவுடி கோல்டி பிரா. இவரை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ. அறிவித்து உள்ளது. இந்தநிலையில் மும்பையை சேர்ந்த முன்னாள் மந்திரி அஸ்லாம் சேக்கின் உதவியாளர் விக்ரம் கபூருக்கு மர்மநபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை போன் செய்தார். எதிர்முனையில் பேசியவர் தன்னை ரவுடி கோல்டி பிரார் என அறிமுகம் செய்து கொண்டார். அவர் அஸ்லாம் சேக்கை 2 நாளில் சுட்டுக்கொலை செய்துவிடுவேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி கோல்டி பிரார் பெயரில் முன்னாள் மந்திரிக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்லாம் சேக் மலாடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் மும்பை பொறுப்பு மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து