மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு கொலைமிரட்டல்; தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் வடக்கு தெருவை சர்ந்த சோலைசாமி மனைவி முனியம்மாள் (வயது 38). இதே பகுதியில் குடியிருப்பவர் அருண்மணி மகன் பிரபாகரன் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் முனியம்மாள் மாட்டுத் தொழுவத்தில் கல்வீசி தாக்கினார்.

இதை முனியம்மாள் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன், முனியம்மாளை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தார்.