அரியாங்குப்பம்
அரியாங்குப்பத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடமானது சுமார் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
இந்தப் பள்ளியின் முன்புறமுள்ள மதில் சுவர் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. கடலூர்-புதுச்சேரி மெயின் ரோடு ஓரத்தில் இந்த மதில்சுவர் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது. எனவே பாதுகாப்பு நலன்கருதி மதில்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் மதில்சுவரை இடித்து அகற்றினர். இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலைப் பொறியாளர் ஜெயமாறன் ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் அமர்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு புதிய மதில்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.