மாவட்ட செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கீழையூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதிபெயரை கூறி திட்டியதை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநில மகளிர் குழு உறுப்பினர் வளர்மாலா முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், வெற்றிவேல், மாநில தணிக்கை குழு உறுப்பினர் ஜம்ருத்நிஷா, பொறியாளர்கள் வெற்றிவேல், சுகுமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.