தலைப்புச் செய்திகள்

கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கும் - ஜெய்சங்கர் பேட்டி

ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் அரிய வகை கனிமங்கள் உள்ளன.

வாஷிங்டன்,

மின்னணு சாதனங்களான, மொபைல் போன், லேப்டாப், கணினி மற்றும் அதில் பயன்படுத்தப்படும் செமி கண்டக்டர்கள் எனப்படும் சிப்கள், மின்சார வாகன பேட்டரிகள், சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் போன்ற பலவற்றுக்கு அரிய வகை கனிமங்கள் தேவை. லித்தியம், கிராபைட், கோபால்ட், நிக்கல் உள்ளிட்டவை அரிய வகை கனிமங்களாக வகைப்படுத் தப்பட்டுள்ளன. இவற்றில், 60 முதல் 90 சதவீதம் வரை சீனாவில் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் இந்த வகை கனிமங்கள் உள்ளன.

இந்நிலையில், அரசியல் மற்றும் வர்த்தக பதற்றங்கள் ஏற்பட்டால், இதன் வினியோக தொடர் பாதிக்கப்படும். இந்த நிலையை மாற்றி, வினியோகத்தை பல நாடுகளுக்கு பரவ செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

கடந்த 13ம் தேதி, அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அதில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். தற்போது அரிய கனிமங்கள் தொடர்பாக விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பிப்ரவரி 4ம் தேதி மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில், நம் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தார்.

இந்தநிலையில், அமெரிக்காவின் கனிம பாதுகாப்பு கூட்டமைப்பை இந்தியா ஆதரிக்கும். எங்களின் இருதரப்பு ஒத்துழைப்பை குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்தோம். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கும் போது நிகழ்ச்சி நிரலைப் பற்றி விவாதிப்பது இயல்பானது. இந்தோ-பசிபிக், மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போன்றவறை குறித்து விவாதிக்கப்பட்டது என வாஷிங்டனில் இந்திய வெளியுறவுட்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.