பகவான் கிருஷ்ணர் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 1-9-2026 முதல் 7-9-2026 வரை

செப்டம்பர் 4-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (புதன்)

* தேய்பிறை சஷ்டி விரதம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (வியாழன்)

* கார்த்திகை விரதம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (வெள்ளி)

* கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லித் தாயார் பவனி.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (சனி)

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

* தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், பிள்ளையார்பட்டி, உப்பூர் தலங்களில் விநாயகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

* சமநோக்கு நாள்.

6-ந் தேதி (ஞாயிறு)

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலையில் வெள்ளி கேடய சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதாரம்.

* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.

* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* உப்பூர் விநாயகப் பெருமான் சிம்ம வாகனத்தில் பவனி.

* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

SCROLL FOR NEXT