ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 11-8-2026 முதல் 17-8-2026 வரை

திருவில்லிபுத்தூரில் நாளை மறுநாள் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

ஆகஸ்ட் 11-ந் தேதி (செவ்வாய்)

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.

* திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை.

* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் விருட்சப சேவை.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (புதன்)

* ஆடி அமாவாசை.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.

* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.

* காரையார் சொரிமுத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

13-ந் தேதி (வியாழன்)

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி.

* திருவாடானை சிநேகவல்லியம்மன், நயினார் கோவில் சவுந்திரநாயகி தலங்களில் ரத உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (வெள்ளி)

* ஆடிப்பூரம்.

* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப்பல்லக்கில் பவனி.

* படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (சனி)

* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி.

* நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி.

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமலத்தில் தவக்கோலம்.

* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (ஞாயிறு)

* நாக சதுர்த்தி.

* திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

* மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (திங்கள்)

* கருட பஞ்சமி.

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.

* சமநோக்கு நாள்.