சுவாமிமலை முருகப்பெருமான் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 14-4-2026 முதல் 20-4-2026 வரை

சுவாமிமலையில் நாளை மறுதினம் முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

இந்த வார விசேஷங்கள்

14-ந் தேதி (செவ்வாய்)

* தமிழ் வருடப் பிறப்பு.

* சமயபுரம் மாரியம்மன் ரத உற்சவம்.

* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றி அருளல்.

* மாவூற்று வேலப்பர் பெருந்திருவிழா.

* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (புதன்)

* பிரதோஷம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் விடையாற்று உற்சவம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

16-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (வெள்ளி)

* அமாவாசை.

* சமயபுரம் மாரியம்மன் தெப்ப உற்சவம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.

* சமநோக்கு நாள்.

18-ந் தேதி (சனி)

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கறி நைவேத்தியம்.

* திருச்செங்காட்டங்குடி உத்திரபதீசுவரர் விருட்சப சேவை.

* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (ஞாயிறு)

* கார்த்திகை விரதம்.

* ராமநாதபுரம் சொக்கநாதர் சித்திரை உற்சவம் ஆரம்பம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி.

* திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் விழா தொடக்கம்.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (திங்கள்)

* அட்சய திருதியை.

* முகூர்த்த நாள்.

* சதுர்த்தி விரதம்.

* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள், ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர், குறுக்குத்துறை சுப்பிரமணியர், செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் விழா தொடக்கம்.

* மேல்நோக்கு நாள்.