3-ந் தேதி (செவ்வாய்)
* பவுர்ணமி.
* ஹோலி பண்டிகை.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருச்செந்தூர் முருகப்பெருமான் தலங்களில் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.
* வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
* காரமடை அரங்கநாதர் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.
* காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* காங்கேயம் முருகப் பெருமானுக்கு லட்சதீபம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.