ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 3-11-2026 முதல் 9-11-2026 வரை

நெல்லையில் 6ம் தேதி காந்திமதி அம்மன் திருக்கல்யாணம், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

இந்த வார விசேஷங்கள்

இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:

நவம்பர் 3-ந் தேதி (செவ்வாய்)

* பத்தமடை மீனாட்சி அம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன் தலங்களில் புறப்பாடு.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (புதன்)

* வீரவநல்லூர் மரகதாம்பிகை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் தலங்களில் பவனி.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (வியாழன்)

* சர்வ ஏகாதசி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன், தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், கடையம் விசுவநாதர் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* பிரதோஷம்.

* நெல்லை காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்.

* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

7-ந் தேதி (சனி)

* திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவர் உற்சவம் ஆரம்பம்.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் பவனி.

* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்சமூர்த்திகளுடன் விழா தொடக்கம்.

* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (ஞாயிறு)

* தீபாவளி பண்டிகை.

* அமாவாசை.

* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாளுக்கு லட்டு அலங்காரம்.

* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் சாற்றியருளல்.

* சமநோக்கு நாள்.

9-ந் தேதி (திங்கள்)

* வீரவநல்லூர் மரகதாம்பிகை தீர்த்த உற்சவம்.

* திருஇந்துளூர் பரிமளரெங்க ராஜர் சந்திர பிரபையில் பவனி.

* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் திருவீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

SCROLL FOR NEXT