இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:
* சர்வ ஏகாதசி.
* சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
* பிரதோஷம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
*திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை பவனி.
* மேல்நோக்கு நாள்.
* மகாளய அமாவாசை.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவர், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், விபீசண ஆழ்வாருக்கு நடையழகு சேவை.
* பாபநாசம், திருக்குற்றாலம், திருவெம்பல் தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
* நவராத்திரி ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
* நெல்லை காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன், சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மனாக காட்சி.
* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்காரம்.
* சமநோக்கு நாள்.
* குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் திருவீதி உலா.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.