திருப்பதி ஏழுமலையான் கோவில் 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா; கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழாக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கின்றன. நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடக்கின்றன. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடப்பது இல்லை. வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான அங்குரார்ப்பணம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

பிரம்மோற்சவத்தின்போது தினமும் வாகனச் சேவைகள் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன. 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை மட்டும் மாலை 6.30 மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கிறது.

கொடியேற்றம்

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) மாலை 6.21 மணியில் இருந்து 6.35 வரை மீன லக்னத்தில் கருட கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை இரவு 9 மணியளவில் பெரிய சேஷ வாகன வீதி உலா நடக்கிறது.

16-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதி உலா, 17-ந்தேதி காலை சிம்ம வாகன வீதி உலா, இரவு முத்துப்பந் தல் வாகன வீதி உலா. 18-ந் தேதி காலை கல்பவிருட்ச வாகன வீதி உலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா, 19-ந்தேதி காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, மாலை கருட வாகன வீதி உலா (கருடசேவை) நடக்கிறது.

SCROLL FOR NEXT