திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

கந்த சஷ்டி விழா தொடங்கியது... திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் விமரிசையாக நடைபெறும். நடப்பு ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

விழாவை முன்னிட்டு மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவருக்கு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

கந்த சஷ்டி விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர்.

தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனது

பொது தரிசன வழியில், பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனர். அதே போல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

இதேபோல் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான ஸ்ரீகோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும் கந்த சஷ்டி விழா துவங்கியது.

SCROLL FOR NEXT