ராவணாசுர வாகனத்தில் உற்சவமூர்த்திகள் வீதிஉலா 
ஆன்மிகம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ராவணாசுர வாகன சேவையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு

கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தின் பிரமாண்டமான நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று மாலையில் கொடியிறக்கப்பட்டது.

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் நடராஜப் பெருமான் வீதியுலா நடைபெற்றது. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய நடராஜர், அண்ணா ராவ் சதுக்கம் வரை ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலுக்கு திரும்பினர்.

காலை 9 மணியளவில் சைவ ஆகம முறைப்படி திரிசூல ஸ்னானம் (திரிசூல தீர்த்தவாரி) நடைபெற்றது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை ராவணாசுர வாகன சேவை நடைபெற்றது. பத்து தலை ராவணாசுர வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ராவணாசுர வாகன சேவை

முன்னதாக பிரம்மோற்சவத்தின் பிரமாண்டமான நிறைவைக் குறிக்கும் வகையில் மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியிறக்கும் நிகழ்வு (த்வஜாவரோஹணம்) நடைபெற்றது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் மேற்பார்வையாளர் சந்திரசேகர் மற்றும் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.