தேரில் எழுந்தருளிய முத்தாரம்மன் 
ஆன்மிகம்

குலசை முத்தாரம்மன் தேரில் வீதி உலா

தேரில் உலா வந்த முத்தாரம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கால சந்தி பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலை சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றது.

பின்னர் முத்தாரம்மன் தேரில் எழுந்தருளி, ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.