அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

தாடிக்கொம்பு அருகே அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்த அகரம் சுக்காம்பட்டியில் வாஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழங்கால அரண்மனை வடிவில் அர்த்தநாரீஸ்வரருக்கு சன்னதி அமைக்கப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இன்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், புனித தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.