ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் 7-ம் நாள் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார்கள்.

இந்த நிலையில் 46 அடி உயரமுள்ள பராசக்தி அம்மன் தேர் ரூ.72 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில், புனரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேரின் வெள்ளோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெள்ளோட்டத்தையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் மாட வீதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் பைகளை தீவிர சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்