ஆன்மிகம்

சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினத்தந்தி

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி பைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு வழிபாட்டில் சீயாத்தமங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்