அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யாகம் 
ஆன்மிகம்

போர் பதற்றம் தணிய வேண்டி சீர்காழி அருகே சிறப்பு யாகம்

30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகஸ்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட பழமையான தலமான இக்கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

போர் பதற்றம் தணிந்து உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த யாகத்தை நடத்தினர்.

இதற்காக 30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. யாகத்தில் ஏராளமான வேள்விப் பொருட்கள் உள்ளிட்டவை இடப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT