கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

நெடுஞ்சேரி பிடாரியம்மன், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, நெடுஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், பிடாரி அம்மன் ஆலயங்களில் 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ள கிராமவாசிகள் தீர்மானித்தனர். அதன்படி திருப்பணி செய்யப்பட்ட நிலையில், மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, மகாலெட்சுமி பூஜை மற்றும் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கோவில் கோபுரங்களை அடைந்தனர். பின்னர் சித்திவிநாயகர், பிடாரி அம்மன் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.